search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாவில் மர்மம்"

    • ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் சாதிக் (வயது 42), கூலி தொழிலாளி குடிப்பழக்கம் கொண்டவர்.
    • சாதிக் வேலைக்கு சென்று விட்டு வரும்போது குடித்துவிட்டு வருவதால் கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் நாராயண நகர் குறிஞ்சி நகர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் சாதிக் (வயது 42), கூலி தொழிலாளி குடிப்பழக்கம் கொண்டவர். இவரது மனைவி ஹசினா (37), இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    சாதிக் வேலைக்கு சென்று விட்டு வரும்போது குடித்துவிட்டு வருவதால் கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மணமுடைந்த ஹசினா குழந்தைகளுடன் வெளியே சென்று விட்டு சிறிது நேரத்தில் பிறகு வீட்டிற்கு வந்தார்.

    அப்போது சாதிக் துணியால் அவரது கழுத்தை நெறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த ஹசினா, சாதிக்கை சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து, தகவல் அறிந்த கிச்சிபாளையம் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் சாதிக் அவரே கழுத்தை நெரித்து தற்கொலை செய்தாரா? அல்லது யாராவது கழுத்தை நெறித்து கொன்றார்களா? இந்த சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் பிரேத பரிசோதனை முழு அறிக்கை வந்தால் தான் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்தாரா? என்ற விவரம் தெரியவரும்.

    • நிஷா, நாமக்கல் மாவட்டம் வையப்பமலை பகுதியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வருகிறார்.
    • கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

    சேலம்:

    ஆத்தூர் நரசிங்கபுரம் திட்டா நகரில் வசித்து வந்தவர் மணி (வயது 43), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி காந்திமதி (36). இவர்களுக்கு கோகுல்நாத் (20) என்ற மகனும், நிஷா (18) என்ற மகளும் உள்ளனர். கோகுல்நாத் கொத்தனார் வேலை செய்து வருகிறார்.

    நிஷா, நாமக்கல் மாவட்டம் வையப்பமலை பகுதியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வருகிறார். மணியின் மனைவி காந்திமதிக்கு கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று விடுவார்.

    பின்னர் அவராக வீட்டுக்கு வந்து விடுவார். அதேபோல் கடந்த 17-ந் தேதி காந்திமதி வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் மணி தனது மகனிடம் அம்மாவை தேடி பார்த்து வருகிறேன் என கூறி வீட்டை விட்டு வெளியே சென்றார்.

    இந்த நிலையில் திட்டாநகர் பகுதியில் உள்ள ெரயில்வே கேட் அருகே மணி ெரயிலில் அடிபட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலே இறந்து கிடந்தார். இது குறித்து நேற்று காலை தண்டவாள பாதையில் வேலை பார்த்து வந்த ஊழியர் ெரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ெரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன், ஏட்டு வெங்கடாசலம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் உடலை கைப்பற்றி ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ெரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில் மணி, ெரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தண்டவாளத்தை கடக்கும் போது ெரயிலில் அடிபட்டு இறந்து விட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எனினும் மணி சாவில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. தொடர்ந்து இதுபற்றி விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. 

    • காலையில் மருத்துவமனைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு பணம் ரூ.100 வாங்கி கொண்டு சென்றார்,
    • தாகர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது மகன் செல்வக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர்

    கடலூர்:

    சிதம்பரம் பழைய புவனகிரி ரோடு தொழிலாளர் குடியிருப்பில் வசிப்பவர் சுதாகர் (வயது 42) . இவர் தட்டுவண்டி தொழிலாளி . சம்பவத்தன்று காலையில் மருத்துவமனைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு பணம் ரூ.100 வாங்கி கொண்டு சென்றார். பின்னர் பிற்பகல் 3 மணி அளவில் பெரிய காஜியார் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சுதாகர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது மகன் செல்வக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த அவரது மகன் சிதம்பரம் போலீசில் புகார் செய்தார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் செல்வக்குமார் தனது தந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கடந்த 8-ந் தேதி அருள்குமார் தனது விவசாய நிலத்தில் பணியை முடித்து விட்டு அருகில் உள்ள பண்ணைக்குட்டைக்கு குளிக்கச் சென்றார்.
    • தொடர்ந்து அருள்குமார் மரணம் மர்மச்சாவாக மாற்றி வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.

    கோவை

    அன்னூரை அடுத்த குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருள்குமார் (வயது 33). கோழிப்பண்ணை நடத்தி வந்தார்.

    இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.

    புதுமாப்பிள்ளை

    கடந்த 8-ந் தேதி அருள்குமார் தனது விவசாய நிலத்தில் பணியை முடித்து விட்டு அருகில் உள்ள பண்ணைக்குட்டைக்கு குளிக்கச் சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

    நீண்டநேரமாகியும் அருள்குமார் வீடு திரும்பாததால் அவரது மனைவி சம்யுக்தா தேடத் தொடங்கினார்.

    உறவினர்கள் அருள்குமாரை தேடி பண்ணைக்குட்டைக்கு சென்றனர். அங்கு நீரில் மூழ்கிய நிலையில் அருள்குமார் பிணமாக மிதந்தார்.

    சாவில் மர்மம்

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் அருள்குமாரின் உடலை மீட்டனர். அருள்குமார் பண்ணை குட்டை நீரில் மூழ்கி இறந்து இருப்ப தாக கூறப்பட்டது. இதுதொடர்பாக அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் அருள்கு மார் மரணத்தில் சந்தே கம் இருப்பதாக கூறி அவரது மாமனார் ராஜேந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் எனது மகளின் கணவரான அருள்குமார் மரணத்தில் சந்தேகம் உள்ளது. எனவே மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். அருள்குமார் குளிக்கச் சென்ற தோட்டத்தில் வேலை செய்பவர்களிடம் போலீசார் விசாரிக்க வேண்டும் என கூறி இருந்தார். இந்த மனுவை தொடர்ந்து அருள்குமார் மரணம் மர்மச்சாவாக மாற்றி வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.

    • கடலூர் அருகே என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் இறந்த மாணவி சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலலில் ஈடுபட்டனர்.
    • இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று கூறினர் .

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் புவனகிரி வடக்கு திட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன்.இவரது மகள் பிரவீனா (வயது 18). இவர் கடலூர் அருகே எஸ்.குமராபுரம் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு விடுதியில் தங்கி படித்து வந்தார். நேற்று காலை கல்லூரி மாணவி பிரவீனா விடுதியில் தூக்கு மாட்டி இறந்த நிலையில் இருந்தார் . தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த கல்லூரி மாணவியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  நேற்று மாலை இறந்த மாணவியின் பெற்றோர்கள் , உறவினர்கள் மற்றும் பா.ம.க. மாவட்ட செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன், மாவட்ட தலைவர் தடா.தட்சணாமூர்த்தி ஆகியோர் தலைமையில் கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையில் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். .அப்போது அவர்கள் கூறுகையில் , கல்லூரி மாணவி இறந்ததில் மர்மம் உள்ளது . ஆகையால் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் . மேலும் இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர் . அப்போது போலீசார் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர் . இதன் காரணமாக கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது . இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×